Saturday, January 12, 2013

இலங்கை தமிழ் சினிமாவின் கதை - I


 இந்த தொடரில் எழுதப்படும் விஷயங்கள்,  சம்பவங்கள்,  நிகழ்ச்சிகள் அனைத்தும்  “ இலங்கை தமிழ் சினிமாவின் கதை எனும் புத்தகத்தில் இருந்தும், இணையத்தில்      இருந்தும்,  மற்றும் சில புத்தகங்கள், கட்டுரைகள் என்பவற்றில் இருந்து மொழி மாற்றம் செய்தும் எழுதப்பட்டவையே. 



இருபதாம் நூற்றாண்டின் மிகச் சக்தி வாய்ந்த மீடியம் சினிமாதான் என்பதில் அபிப்பிராய பேதம் கிடையாது. ஏனைய ஊடகங்களை விடஇப்பொழுதுதான் நூறு வயதை எட்டிப் பிடித்திருக்கும் இந்த விஞ்ஞானம் சார்ந்த ஊடகத்தின் உடனடித் தாக்கம் மிக அதிகமானது. ஒரு சராசரிக் குடிமகனது அன்றாட வாழ்வின் அதிக அளவு இரண்டறக் கலந்து போய்விட்ட மீடியம் இதுதான். உலக உருண்டையின் பல்வேறு பாகங்களில் வாழும் பலதரப்பட்ட படைப்பாளிகள் இதை உற்சாகத்தோடு முன் எடுத்துச் சென்று கொண்டிருக்கிறார்கள்.

இலங்கையின் சிங்கள சினிமா கூடசிறிதளவாகச் சர்வதேச தரத்தில் வைத்துப் பேசக் கூடிய நிலையை நெருங்கிக் கொண்டிருக்கிறது.ஆனால்ஈழத்தின் தமிழ் சினிமா…? மிகமிகப் பின்தங்கிப் போய்இன்றும் அரிச் சுவடிக் கட்டத்திலேயே இருக்கிறது. இந்திய சினிமாவின் குறிப்பாகத் தென்இந்திய சினிமாவின் ஆதிக்கமும்அந்த சினிமாவே தங்கள் சினிமா என்று ஈழமக்கள் கொண்டாடியதும் இதற்கு முக்கிய காரணங்கள்.

சிங்கள சினிமாவின் ஆரம்பகால வளர்ச்சிக்கு அடிகோலியவர்களே தமிழர்கள்தான். சிங்கள சினிமாத் தயாரிப்பிலும்தென்னிந்திய சினிமா விநியோகத்திலும் தங்கள் நேரத்தை முடக்கி லாபம் சம்பாதித்த இலங்கைத் தமிழ் முதலாளிகள்தங்களுக் கென்று ஒரு ஈழத் தமிழ் சினிமாவை அதன் அடையாள முகவரிகளோடு வளர்க்கத் தவறிவிட்டார்கள் என்பதுதான் வருத்தமான உண்மை.

இவற்றிற்கு மத்தியில்தொழிற் நுட்பத்திலும் மீடிய ஆளுமையிலும் மிகச் சாதாரணமாய் இருந்த  ஆனால்ஈழ மண்ணின் மணத்தையும் இலங்கைத் தமிழரின் ஆத்மாவையும் ஓரளவு பிரதிபலிக்க முயன்ற ஓன்றிரண்டு தமிழ்ப் படங்களையும் பார்த்திருக்கிறேன். சர்வதேச திரைப்பட விழாக்களில் நடுவர் குழு அங்கத்தவனாகவும்,விருந்தினனாகவும் கலந்து கொண்ட சமயங்களில்அதிகம் மக்கள் தொகையற்ற சின்னச் சின்ன நாடுகளிலிருந்து வந்த அற்புதமான படங்களைப் பார்க்கும் போதெல்லாம்,இலங்கையிலிருந்துகூட இப்படியொரு படம் - தமிழ்ப்படம் வரக்கூடாதா என்று நான் அங்கலாய்ப்பதுண்டு.

இலங்கைத் தமிழ் சினிமா தனது தற்போதைய சூழ்நிலையின் ஊடாக உலக தரம் வாய்ந்த பல அசாத்தியமான படங்களைத் தரமுடியும் என்று நான் திடமாக நம்புகிறேன். இது வெறும் உணர்ச்சி வசப்பட்ட நம்பிக்கையல்ல. சம்பந்தப்பட்டவர்கள் மனசு வைத்தால்ஈழத்து இளைய தலைமுறையின் வீரிய வீச்சு அங்குள்ள சினிமாவிலும் பிரதிபலிக்கும். இது சத்தியம். சர்வதேச கலை இலக்கிய அரங்கில்தமிழ் மொழியின் முகத்தை ஈழத்து எழுத்துக்களே அடையாளம் காட்டப் போகின்றன என்ற உறுதியான விமர்சனம் வைக்கப்படும் இந்தக் காலகட்டத்தில்அந்த நம்பிக்கை திரைப்படங்களுக்கும் பொருந்த வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன்.







- 1994 ஆம் வருடம்  " இலங்கை தமிழ்சினிமாவின் கதை " என்ற புத்தகத்திற்கு இயக்குனர் பாலு மகேந்திரா  எழுதிய முன்னுரையில் இருந்து -

                                                                                                                                 - ஆனந்த ஷா -


0 comments:

Post a Comment