என்னடா எவன்னே தெரியாத ஒருத்தன் இவளவு பில்ட் அப் போட என்ட்ரி ஆகுறானேன்னு பாக்கிறிங்களா... அதை எல்லாம் கண்டுக்காதிங்க பாஸ்.... நானும் எல்லாரமாதிரியும் ஒரு சாதாரண சினிமா ரசிகன்தான்.... எனக்கு சினிமாவா ரசிக்கமட்டும்தான் தெரியும்... எனக்கு நினைவு தெரிஞ்சு இத்தனை நாளா நான் எவ்வளவோ படங்கள் பாத்திருக்கேன் பட் ஒருநாளும் அதைப்பற்றி எழுதனும்ன்னு தோணினது கிடையாது.... ஆனால் இப்போ ஒரு கம்முனாட்டி நாய் என்னை எழுத வச்சிரிச்சு.... அடப்பாவி இங்க ஏற்க்கனவே இருக்கிறவனுக தொல்லையே தாங்க முடியல இதில இவன் வேற லேப்டாப்பை தூக்கிட்டு கெளம்பிட்டான்னு நீங்க திட்டிறது நல்லாவே கேக்கிது.... நான் என்ன பண்ண பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்குல்ல.... அப்பிடி நீங்க இவ்வளவு காண்டாகிற அளவுக்கு என்னதான் நடந்திச்சின்னு தயவு செய்து கேட்டிறாதிங்க அப்புறம் நான் என் டெரர் பேசை காட்டவேண்டி வரும்....
எனக்கு படம் பார்க்கிறது ரொம்பப்பிடிக்கும்... விமர்சனம் எல்லாம் எனக்கு எழுதத்தெரியாது.... விமர்சனம் எழுதிற அளவுக்கு எனக்கு தகுதி இல்லை.... ஒரு படத்தை பார்த்தியா உனக்கு பிடிக்கல்லையா தியேட்டர் வாசல்லயே அதை விட்டிட்டு போய் பொழப்பை பாரு அத விட்டிட்டு இது அந்தப்படத்தோட காப்பி / இப்பிடி நான் ஏற்கனவே ஒரு ஹாலிவுட் படம் பாத்திருக்கேன் / படத்தில அது மொக்கை / பாதிலயே எழுந்து வாந்திரனும் போல இருக்குன்னு சொல்றதெல்லாம் சின்னப்புள்ள தனமாத்தெரியல்லை ராஸ்கல்ஸ்..... தமிழ் படங்களைப்பற்றி வர்ற விமர்சனங்களை எல்லாம் பார்த்து நான் ரொம்ப நொந்துபோய் இருக்கேன்.... ஏதோ இவனுக எல்லாருக்குமே கிறிஸ்தோபர் நோலனோட பேரப்பிள்ளைங்கன்னு நினைப்பு போல இருக்கு...
எல்லாப்படைப்பாளிக்களுமே அவங்களோட படத்தை ரொம்ப கஷ்டப்பட்டுத்தான் எடுக்கிறாங்க.... அது நல்ல படமா இருந்தாலும் சரி மொக்கை படமா இருந்தாலும் சரி... அதுக்கு நாம கண்டிப்பா மரியாதை கொடுக்கணும்.... மரியாதை கொடுக்கல்லைன்னாலும் பரவால்ல பொத்திட்டு இருந்தாலே போதும்... என்ன எங்களுக்கு பேச்சு சுதந்திரமும் எழுத்து சுதந்திரமும் இருக்குன்னு சொல்ல வர்ரிங்களா ??? கண்டிப்பா இருக்கு இப்போ யாரு இல்லைன்னு சொன்னா.... ஆனால் எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்.... உங்க பேச்சு எழுத்து சுதந்திரத்தை வச்சு சினிமா பற்றியும் சினிமாக்காரங்க பற்றியும் மட்டும்தான் எழுதி கிழிப்பிங்களா ??? பதினெட்டு வயசுக்கு குறைஞ்சவங்களுக்கு சிகரெட் விக்கிற கடைக்காரனை கேள்வி கேக்க மாட்டேன்றிங்க ஆனால் சினிமால சிகரெட் பிடிச்சா மட்டும் கூவுறிங்க / நடு ரோட்டில காறி எச்சில் துப்புற சைக்கிள் காரனை கண்டுக்கவே மாட்டேன்றிங்க ஆனால் நடுநிசி நாய்கள் மேல காறி துப்புறிங்க / கண்ணுக்கு முன்னாலேயே லஞ்சம் வாங்கிற traffic போலீசை கண்டும் காணாம போறிங்க ஆனால் நமீதா தொப்புள் தெரிஞ்சா தலைப்பு செய்தில எழுதரிங்க.... ஒரு படத்தோட பாதிப்பு மிஞ்சி மிஞ்சி போனா ரெண்டு நாளைக்கு இருக்குமா ??? ஆனால் நேற்று எச்சி துப்பினவன் இன்னைக்கு துப்புவான் நாளைக்கு துப்புவான் நாளன்னைக்கும் துப்புவான் இதை பற்றி யாரும் எழுதலை பேசல்ல புரட்சி பண்ணல (அந்நியன்ல ஷங்கர் சொன்னாரு அதை கூட seven படத்தோட காப்பின்னு அறிக்கை விட்டுட்டானுக ஹி ஹி ஹி) இப்டி லஞ்சம் வாங்கிறவன் அவனோட service முடியும் வரை வாங்குவான்... சிகரெட் விககிறவன் சாகும் வரை விப்பான்.... இதை எல்லாம் கேக்கமாட்டிங்க ஏன்னா சினிமாக்காரன்தானே திருப்பி அடிக்க மாட்டான்.... ஏண்டா தினசரி வாழ்க்கைல எவளவோ குப்பை இருக்கு அதை பற்றி பேசு அதை பற்றி எழுது... அதை விட்டிட்டு வருஷத்தில ஒருமுறை வர்ற படத்திக்கு கொந்தளிச்சு ஏண்டா கலோரிய வேஸ்ட் பண்றீங்க....
இங்க நான் எழுதப்போற படங்களை ரெண்டு வகைகுள்ள மட்டும்தான் என்னால அடக்க முடியும்
1 - எனக்கு பிடிச்சபடம்
2- என்னால ரசிக்க முடியாம போன படம்
இதில ரெண்டாவது வகையப்பற்றி நான் எதுவுமே பேசப்போறது கிடையாது ஏன்னா எனக்குப் பிடிக்காதது நிறைப்பேருக்கு பிடிச்சிருக்கலாம்.... எங்கம்மாவோட சமையலப்பற்றி நான் நல்லா இருக்கு நல்லா இல்லைன்னு மட்டும்தான் சொல்ல முடியும் ஏன்னா எனக்கு சமைக்கத்தெரியாது... அதை விட்டிட்டு இதுக்கு இவ்வளவு உப்பு போடணும் / புளி காணாதுன்னு எல்லாம் சொல்ல முடியாது அப்பிடி சொல்லனும்னா நான் நல்ல சமையல்காரனா இருக்கணும்.... சினிமாவும் அது மாதிரித்தான் பாத்தியா ரசிச்சியா நல்லா இருக்கா சந்தோஷப்படு இல்லையா படம் மொக்கை ன்னு சொல்லிட்டு பேசம போய்ட்டே இரு அதை விட்டிட்டு
“ தமிழ் சினிமாவின் தலை சிறந்த இயக்குனர் என தன்னைத்தானே நினைத்துக்கொண்டிருக்கும் இயக்குனர் இப்பிடி ஒரு மோசமான மொக்கைப்படத்தை எடுத்திருக்கிறார்.... இப்பிடி ஒரு படத்தை பார்த்ததற்கு பதிலாக்க ஷகீலாவின் சயாக்கடை சரசு பாத்திருக்கலாம்னு “ ( இப்பந்தியில் வரும் வரிகள் அனைத்தும் உதாரணத்திகற்காக சொல்லப்பட்ட கற்பனையே இவை யாரையும் குறிப்பிடுவன அல்ல... லொலொலொலொலா லா லா.................... ) சொல்றது எல்லாம் நல்லாவா இருக்கு ???
எல்லா ரசிகனுக்கும் விமர்சனம் பண்ற உரிமை இருக்கு ஆனால் அது எதுவரைக்கும்ன்னுதான் தெரியல்லை ஒரு இயக்குனர் அரிப்பில படம் எடுத்திருக்கார்ன்னு விமர்சனம் பண்ற அளவுக்கான்னா கண்டிப்பா கிடையாது... நான் எல்லாம் சிவனேன்னு என்பாட்டுக்கு உக்காந்திட்டு இருக்கவன்... ஏண்டா என்னை எல்லாம் எழுத வைக்கிறிங்க ??? .கண்ணுக்கு முன்னாடி எவ்வளவோ குப்பை இருக்கு அதை திருத்த வக்கில்லை சினிமான்னா மட்டும் வக்கணையா வாய்கிழிய பேசத்தெரியும்... கண்ணுக்கு முன்னாடி ஒரு பொண்ண பசங்க கொஞ்ச குரூப்பா சேர்ந்து ஈவ்டீசிங் பண்ணுவாங்க அதை பார்த்திட்டு பொத்திட்டு போவாணுக ஆனால் முதல்வன் படத்தை தடை செய்ய சொல்லி ஆர்ப்பாட்டம் பண்ணுவாங்க / அரசாங்க அலுவலகங்கல்லையும் , ஆஸ்பத்திரிலையும் வயசான பெரியவங்களை நாய் மாதிரி நடத்துவாங்க அத கேக்க ஒரு பய இல்லை ஆனால் ரமணா படத்தில லாஜிக் மிஸ்டேக் கண்டுபுடிப்பாங்க.... இவனுங்களே லஞ்சம குடுத்திருப்பாங்க வாங்கிறவனை கண்டிருப்பாங்க அதை கேக்க ஒரு ஈ காக்கா கூட கிடையாது ஆனால் அந்நியன் இவங்களுக்கு ஹாலிவுட் படத்தோட காப்பின்னு தெரிஞ்சிரும் / ஒரு குழந்தைக்கு பாலியல் துஸ்பிரயோகம் நடந்திருக்குன்னு பேப்பர்லயோ இல்ல நியூஸ்லயோ பார்த்து எவனாவது கொந்தளிச்சிருக்கானா ??? (அரசியல்வாதிகள் இருக்காங்களேன்னு பதில் சொன்னால் அது பஞ்சாயத்தில் செல்லாது) இவனுகளை எல்லாம் ஒரு பெரியார் இல்லை நூறு பெரியார் வந்தாலும் திருத்தவே முடியாது....
ஒரு படத்தில லேசா புடவை விலகினா போதும் உடனே ஆபாசப்படம்ன்னு கொடியப்பிடிக்கிறது அதுவே அந்தப்படத்துக்கு பெரிய விளம்பரமா போயிரும் அப்புறம் என்ன படம் ஹிட்...அறிவுஜீவிகளா ஆபாசமாப்பார்த்தா ஒரு தாய் குழந்தைக்கு பால் குடுக்கிறது கூட ஆபாசம்தான் அதை முதல்ல புரிஞ்சுக்கோங்க... சினிமாவ தயவு செய்து சினிமாவா இருக்க விடுங்க..., உனக்கு புடிக்கல்லைன்னா பேசாம விட்டிரு அடுத்தவனங்களோட ரசனை உன்னோடதோட கடைசி வரைக்கும் ஒத்துப்போகாது அப்பிடி ஒத்துப்போனால் நிறையப்பேர் ஒரே பொண்ண கல்யாணம் பண்ணி இருக்க வேண்டி வந்திடும் ( சிவ சிவா இதை நினைக்கவே ஏன் உடம்பு கூசுதே இதை கேள்விப்பட்டா இந்து மக்கள் கட்சி உடனே நாய புடிச்சிட்டு வந்து எங்க வீட்டு முன்னாடி ஆர்ப்பாட்டம் பண்ணிறப்போறாங்க )
அம்மா காளியாத்தா இவனுகளுக்கு நல்ல புத்திய குடு தாயே அப்பிடிமட்டும் நடந்தா அவங்க எல்லாருக்குமே மொட்ட அடிச்சு கடா வெட்டி உனக்கு பொங்கல் வைக்கிறேன்.....
இப்போ நான் இவ்வளவு நேரமா என்ன சொல்ல வந்தேன்னா நானும் இனிமேல் எழுதப்போறேன் எங்க எல்லாரும் ஒருமுறை ஜோரா கைதட்டுங்க பார்க்கலாம்.......
குறிப்பு
இந்த கட்டுரை நல்ல விமர்சகர்களுக்கு பொருந்தாது யாரெல்லாம் உங்களை நல்ல விமர்சகர்ன்னு நினைக்கிறீங்களோ அவங்க எல்லாம் இது எனக்கு இல்லைன்னு நினைச்சுகொள்ளுங்க..... இது என்னுடைய தனிப்பட்ட கருத்து யாரையும் தாக்கனுங்கிற நோக்கத்தில எழுதப்பட்டது கிடையாது..... ஏதாவது தப்பிருந்தா தயவுசெய்து என்னை மன்னிச்சுடாதிங்க தட்டி கேளுங்க......
- ஆனந்த் ஷா -